×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியான கிருஷ்ணதாபா உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சியான கிருஷ்ணதாபா உதகை நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். சயான் உள்பட 9 பேர் விசாரணைக்காக உதகமண்டலம் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். முக்கிய சாட்சியான கிருஷ்ணதாபா உதகை நீதிமன்ற நீதிபதி வடமலையிடம் கோடநாடு சம்பவம் குறித்து சாட்சியம் அளித்தார்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி அன்று காவலாளி ஓம்பிரகா‌‌ஷ் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதுதொடர்பாக ‌‌ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோ‌‌ஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

‌‌ஷயான், மனோஜ் ஆகிய 2 பேர் கோவை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ஊட்டி கோர்ட்டில் நேற்று கோடநாடு கொலை வழக்கு விசாரணைக்கு வந்தது. கோவை மத்திய சிறையில் இருந்து ‌‌ஷயான், மனோஜ் இருவரையும் போலீசார் ஊட்டி கோர்ட்டில் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். மற்ற 8 பேரும் கோர்ட்டுக்கு வந்து ஆஜரானார்கள். இதையடுத்து போலீஸ் தரப்பில் 2 சாட்சிகளை அழைத்து வந்திருப்பதாக அரசு வக்கீல் நீதிபதி வடமலையிடம் தெரிவித்தார்.


Tags : witness ,murder ,Kodanad ,Krishnadaba , Kodanadu murder, robbery, Krishnadaba, Azhar
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...