×

சி.ஐ.எஸ்.எஃப்., தேர்வில் முறைகேடு என புகார்: நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றி வந்த அசாம் வீரர் பணிநீக்கம்

திருநெல்வேலி:  நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றி வந்த சி.ஐ.எஸ்.எஃப் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, சி.ஐ.எஸ்.எஃப்., பாதுகாப்பு படை வீரர் பிரிகு பாருயா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அசாமை சேர்ந்த இவர் 2017ம் ஆண்டு மத்திய பாதுகாப்பு படைக்கு எழுத்து தேர்வு மற்றும் உடல் தேர்வு செய்யப்பட்டு பயிற்சிக்காக சேர்ந்துள்ளார். பிறகு, 2018ம் ஆண்டு முதல் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றி வருகிறார். 2017ம் ஆண்டு எழுதிய பயிற்சி தேர்வில் அவர் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பின்னர், நடைபெற்ற பணிக்கான மற்றொரு தேர்வில், சரியாக தேர்வெழுத்தாமல் இருந்ததால் மதிப்பெண்கள் குறைந்து காணப்பட்டது.

இதனால் பயிற்சி குழுவினர் பிரிகு பாருயா முன்பு எழுதிய தேர்வு வினாத்தாள்கள் மற்றும் அதற்குப்பின், எழுதிய வினாத்தாள்களையும் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். 2 வினாத்தாள்களிலும் உள்ள எழுத்து வித்தியாசத்தத்தில் சந்தேகம் ஏற்பட்டதால் சிம்லாவிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆய்விற்கு பிறகு அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பிரிகு பாருயா கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், துறைரீதியான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், மேலும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் விரைவில் கண்டறியப்படுவதாக விசாரணை குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : CISF ,center ,veteran ,Mahendragiri ISRO ,Assam ,player , CISF selection, abuse, reporting, ISRO center, player, dismissal
× RELATED சிஐஎஸ்எப்.யில் மார்ச் வரை டிரான்ஸ்பர் கிடையாது