×

டெல்லி ஷாகின்பாக் போராட்டத்தை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் மறுப்பு: வழக்கை வருகின்ற பிப்.17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு...

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் டெல்லி ஷாகின்பாக்கில் போராட்டம் நடத்தி வருபவர்களை அப்புறப்படுத்த உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஷாகின்பாக்கில் தொடர் போராட்டம் நடத்தி வருபவர்களை வெளியேற்ற உத்தரவிடக்கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் போராட்டம் நடத்துவதற்கு என்று பொது இடத்தை ஒதுக்க அரசுக்கு அறிவுறுத்தி டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்து வழக்கை வருகின்ற 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து இருக்கிறார்கள். குடியுரிமை திருத்த சட்டம் என்பது மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதற்கு குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.

இது சட்டத்துக்கு எதிரான செயல் என்றுதான் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஆகவே தலைநகர் டெல்லி ஷாகின்பாக் பகுதியில் தொடர்ந்து 50-நாட்களுக்கு மேலாக இந்த போராட்டம் என்பது நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் என்பது சட்டத்துக்கு விரோதமாக நடத்தப்பட்டு வருகிறது, எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியது என்னவென்றால் போராட்டம் நடத்துவதற்கு இந்தியாவில் அனைவருக்கும் அனுமதி இருக்கிறது.

அதே சமயத்தில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் தான் போராட்டம் என்பது நடத்தப்பட வேண்டும், மேலும் பொதுமக்களுக்கு இடையூறு வரும் இடங்களில் அனுமதியில்லாமல் நடக்கும் போராட்டங்களை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்தனர். மேலும் போராட்டம் நடத்துவதற்கு என்று பொது இடத்தை ஒதுக்க அரசுக்கு அறிவுறுத்தி டெல்லி போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்து வழக்கை வருகின்ற 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து இருக்கிறார்கள்.

இந்த வழக்கை பொறுத்தவரையில் இந்த இடத்தில் போராட்டம் என்பது 55-நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பெண்மணி ஒருவர் அந்த போராட்டத்தில் ஈடுபட்டு, அவர் கொண்டு வந்த 4 மாத குழந்தை உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இறந்த சம்பவத்தையும் அந்த வழக்கில் குறிப்பிட்டு உள்ளனர். இந்த போராட்டத்தில் தாயார் 4 மாத குழந்தையை கொண்டு வந்ததன் காரணமாக தான் அந்த குழந்தை இறந்ததாகவும், எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது, இந்த வழக்கை வருகின்ற பிப்ரவரி.17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Supreme Court ,Delhi ,Shakinoba , Delhi, Shaikhinbakh struggle, Supreme Court, denial
× RELATED உச்ச நீதிமன்றத்தில் ஜூலை முதல்...