×

நீர்மட்டம் குறைவு, மோட்டார் பழுதால் செயல்பாடின்றி கிடக்கும் குடிநீர் தொட்டி: விரைவில் சீரமைக்க கோரிக்கை

கரூர்: கரூர் தாந்தோணிமலை வெங்கடேஷ்வரா நகர்ப்பகுதியில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பயனற்ற நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் வெங்கடேஷ்வரா நகரில் நான்கு தெருக்கள் உள்ளன. மேலும், இந்த பகுதியின் அருகே வடக்குத்தெரு மற்றும் சவுரிமுடித்தெரு உள்ளது. நூற்றுக்கணக்கான குடுமபத்தினர் இப்பகுதியில்
வசிக்கின்றனர். இந்த பகுதியினர் உபரி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்டெக்ஸ் டேங்க் அமைத்து தரப்பட்டது.

ஒருசில ஆண்டுகள் மட்டும் பயன்பாட்டில் இருந்த இந்த குடிநீர் தொட்டி கடந்த ஒரு ஆண்டாக மோட்டார் பழுது மற்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைவு போன்ற காரணங்களால் செயல்பாடின்றி உள்ளது. இதனால், இந்த பகுதியினர் உபரி தண்ணீர் பிடிக்க முடியாமல் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சீரமைத்து தர வேண்டும் என பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளது எனவும் கூறப்படுகிறது. எனவே, அனைத்து தரப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, பயனற்ற நிலையில் உள்ள இந்த டேங்கினை விரைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Water level drop, motor repair, drinking water tank
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...