×

கரூர் திண்ணப்பா நகரில் சிதிலமடைந்த டிரான்ஸ்பார்மர் விரைவில் மாற்றப்படுமா?... பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர்: கரூர் திண்ணப்பா நகரில் இருந்து திருச்சி பைபாஸ் சாலைக்கு செல்லும் சாலையோரம் சிதிலடைந்த நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மர் விரைவில் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் திண்ணப்பா நகர்ப்பகுதியில் ஏராளமான தெருக்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் கரூர்-திருச்சி பிரதான சாலைக்கு செல்லும் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மின்சப்ளை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த டிரான்ஸ்பார்மரின் சிமெண்ட் துகள்கள் அனைத்தும் சிதிலடைந்து மோசமான நிலையில் உள்ளது. இதனைச் சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. டிரான்ஸ்பார்மரின் கீழ்ப்பகுதிகள் அனைத்தும் சிதிலடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே, இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகல் பார்வையிட்டு விரைவில் மாற்றித் தர வேண்டும் என இப் பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Transformer ,Karur Thinnapa ,Karur Thinnappa , Karur Thinnappa, Transformer
× RELATED ஊரடங்கால் 22 நாட்கள் ரயில் சேவை ரத்து...