×

பாகிஸ்தான் நாட்டில் அச்சிடப்பட்ட சுமார் ரூ.24 லட்சம் மதிப்புடைய 2000 ரூபாய் கள்ள நோட்டுக்கள் மும்பையில் பறிமுதல்

மும்பை: பாக்கிஸ்தான் நாட்டில் அச்சிடப்பட்ட  சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய புலனாய்வு முகமை அளித்த தகவலின் பேரில், துபாயில் இருந்து விமானம் மூலம் வந்த ஜாவேத் ஷேக் என்ற பயணி பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, அவர் எடுத்து வந்த பெட்டியில் கள்ள நோட்டுகளை ஜாவேத் ஷேக் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பாகிஸ்தானில் இருந்து துபாய் கொண்டுவந்து அங்கிருந்து இந்தியாவுக்கு கடத்தியதை ஜாவேத் ஒப்புக்கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் கண்டறியாத வகையில் கள்ளநோட்டில் 7 பாதுகாப்பு அம்சங்கள் கச்சிதமாக இருந்ததாகவும், சூட்கேஸின் உள்பகுதியின் விளிம்புகளில் மறைத்து வைத்திருந்ததால் நோட்டுகளை விமானநிலைய சோதனையின்போது கண்டுபிடிக்கமுடியிவில்லை என்றும் போலீசார் விளக்கம் அளித்தனர்.

Tags : Pakistan , Pakistan, Rs 24 lakh, Rs 2000, counterfeit notes, Mumbai, confiscated
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்