×

நம்பிக்கை தளராமல் புத்துணர்வோடு கடைசி வரை உழைத்தால் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் அனைவருக்கும் வெற்றி நிச்சயம்: கல்வியாளர்கள் கருத்து

தமிழகம் முழுவதும் வரும் மார்ச் மாதம் 10, 11 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கான அரசு பொது தேர்வுகள் நடைபெற உள்ளது. மாணவர்களின் எதிர்கால கல்வி பயணத்தை தீர்மானிக்கும் ஒரு திசைகாட்டியாக இந்த தேர்வுகள் கருதப்படுகிறது. மாணவர்கள் எப்படியும் வெற்றி பெற வேண்டும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு கடைசி நேர தயாரிப்பில் இருக்கின்றனர். பொதுவாக தேர்வு பற்றிய பயத்தை மாணவ, மாணவிகள் தவிர்க்க வேண்டும். அச்சப்பட தேவையில்லை. தேர்வை தைரியமாக எதிர்கொண்டாலே, 80 மதிப்பெண்களுக்கு மேல் பெற முடியும். நல்ல முறையில் படித்து தேர்வு எழுதினால் 100 மதிப்பெண் பெறலாம். நிறைய எழுதினால் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற எண்ணம் சில மாணவர் களிடையே உள்ளது. தேவையான பதில் இருந்தாலே போதிய மதிப்பெண் கிடைத்து விடும். பொதுவாக பாடங்களை திட்டமிட்டு படிப்பது போல், தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிட்டு எழுத வேண்டும்.

மீதமிருக்கும் இந்த குறைவான காலத்தில் திட்டமிட்டு தன்னம்பிக்கையோடு படித்தால் எல்லோரும் வெற்றி பெற முடியும். இந்நிலையில் அரசு பொது தேர்வை மாணவர்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்று உளவியல் நிபுணர்கள், கல்வியாளர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். இதுகுறித்து உளவியல் மற்றும் தன்னம்பிக்கை தேசிய பயிற்சியாளர் முனைவர் சம்பத் கூறுகையில், பொது தேர்வில் வெற்றி என்பது எல்லோ ருக்கும் மிக முக்கியமான ஒன்று.ஒவ்வொருவரின் எதிர்காலத்தை இந்த வெற்றிகள் தான் தீர்மானிக்கின்றன. எனவே இந்த கடைசி நேரத்தை வீணாக் காமல் திட்டமிட்டு மாணவர்கள் படிக்க வேண்டும். தேர்வில் வெற்றி பெற ஐந்து முக்கிய காரணிகள் அவசியம். இலக்கு, நேர்மறை சிந்தனை, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியனவாகும். இலக்கு: ஒவ்வொரு மாணவனுக்கும் இலக்கு என்பது முக்கியம். பொதுத் தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கினை வைத்துக்கொள்ள வேண்டும்.

அதற்கு தகுந்தாற் போல் படிப்பு கால அட்டவணை தயார் செய்து கொண்டு படித்தால் இலக்கினை அடைய முடியும்.இலக்கில்லாத உழைப்பு வீனாகிப் போகும்.
நேர்மறை சிந்தனை: முயன்றேன் வெற்றி பெற முடியவில்லை என்பது எதிர்மறை சிந்தனை. முயன்றால் என்னாலும் வெற்றி பெற முடியும் என்று நினைப்பது நேர் மறை சிந்தனை. தோற்ற நிகழ்வுகளை மனதில் இருந்து தூக்கி எறிய வேண்டும். இன்று எனக்கு வெற்றி பெற போதிய ஆற்றல் இருக்கிறது என நினைத்தால் வெற்றி எளிதாகும். தன்னம்பிக்கை : நமது ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை அவசியம், அடுத்தவர்களால் வெற்றி பெற முடியும் என்றால், நம்மாலும் வெற்றி பெற முடியும் என்கிற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும்.பொதுத் தேர்வுகள் போட்டித் தேர்வுகள் அல்ல. எல்லோரும் பொதுத் தேர்வில் வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை கொண்டு உத்வேகத்தோடு படிக்க வேண்டும். கடின உழைப்பு: எந்த வெற்றிக்கு பின்னும் கடின உழைப்பு இருக்கிறது.கடின உழைப்பிற்கு ஈடு இணை ஏதும் இல்லை.இந்த வாய்ப்பு இன்னும் ஒரு முறை கிடைக்காது என்பதை உணர்ந்து நேரத்தை வீணாக்க காமல் போர் வீரனைப் போல் வெறியோடு படிக்க வேண்டும்.

விடா முயற்சி: கடந்த அரையாண்டு,திருப்புதல் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் மனம் தளராமல் கேள்வி தாளையும், விடை த் தாளையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து எந்த கேள்விகள் தவறாக எழுதப் பட்டுள்ளது என்று அறிந்து அந்த பகுதியினை புரிந்து மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும்.கேள்விகளுக்கான பதில்களை விடா முயற்சியுடன் எழுதி எழுதி பார்க்க வேண்டும். பொது தேர்வுதான் இலக்கு, இடையில் ஏற்பட்ட தோல்விகள் விடா முயற்சி யால் வென்று விட முடியும் என்ற நினைத்தால் வெற்றி எல்லோருக்கும் சாத்தியமே. எனவே மாணவர்கள் நம்பிக்கை தளராமல் புத்துணர்வோடு கடைசி வரை உழைத்தால் எல்லோர்க்கும் வெற்றி நிச்சயம். இவ்வாறு சம்பத் கூறினார். இதுகுறித்து கல்வியாளர் கோட்டூர் தங்கபாபு கூறுகையில், கேள்விக்கு பதில் எழுதும் முன் கேள்விகளை நன்றாக படித்து பார்த்துக் கொள்ள வேண்டும். கேள்விக்கு சரியான பதிலை தான் எழுதுகிறோமோ என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். கேள்விக்கு சம்பந்தம் இல்லாத பதில்களை எழுதக்கூடாது. அவ்வாறு எழுதினால், திருத்தும் ஆசிரியர்களுக்கு நம் மீதுள்ள நல்ல நம்பிக்கை போய்விடும்.

அடிக்கோடு இடுவதற்கு கருப்பு, நீல மை பேனாக்களை பயன்படுத்தலாம். வினாத்தாளில் அதிகம் அலங்காரம் செய்ய வேண்டாம். மனப்பாடம் செய்ய வேண்டியவைகளை மட்டுமே மனப்பாடம் செய்ய வேண்டும், பிறவற்றை புரிந்து படித்துக் கொள்ள வேண்டும். இந்நடை முறைகளை கையாண்டால் நல்ல மதிப்பெண் பெறுவது உறுதி. தேர்வு எழுதும் நேரத்தை திட்டமிடுவது முக்கியம். சுருக்கமாக விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் மேற்கொள் இட வேண்டும். மனப்பாட பகுதிகளில் சுலபமாக மதிப்பெண் கிடைக்கும். விரைவாகவும், தெளிவாகவும் எழுத மாணவர்கள் தொடர் பயிற்சி எடுத்திருக்க வேண்டியது அவசியம். மேலும் ஒன்றரை பக்க பதிலுக்கு நான்கு பக்கம் பதில் எழுதி நேரத்தை வீணாக்க கூடாது. தேர்வில் கேள்விகளுக்கான பதில்களை எழுதி விட்டு பக்க எண்களை சரி பார்த்த பின்னரே, விடைத்தாளை கட்ட வேண்டும். இதில் அவசரப்பட கூடாது. உங்கள் வாழ்க்கை பயணத்தில் முதல் பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவ கண்மணிகள், முதல் மாணவராக உயர்ந்தால் வாழ்விலும் முதலா வதாக வரலாம் என்ற எண்ணத் துடன் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். இவ்வாறு கோட்டூர் தங்கபாபு கூறினார்.

Tags : Educators , Examination, students, success is sure, academics
× RELATED 10 லட்சம் மாணவர்கள், 2 லட்சம்...