டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் நாள்தோறும் அதிர்ச்சி: இடைத்தரகர் ஜெயக்குமார் 10 ஆண்டுகளாக முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிப்பு!

சென்னை: டி.என்.பி.எஸ்.சி முறைகேடு வழக்கில் மூளையாக செயல்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமார் 10 ஆண்டுகளாக முறைகேட்டில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. டி.என்.பி.எஸ்.சி குரூப்-4, குரூப்-2ஏ தேர்வு முறைகேடு வழக்கு, நாள்தோறும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நாள்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியாகி கைது நடவடிக்கைகள் தொடர்கதையாகி வருகின்றன. இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட இடைத்தரகர் ஜெயக்குமாரை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறைகேட்டில் ஈடுபட்டது எப்படி? என்பு குறித்து ஜெயக்குமார் போலீசார் முன்னிலையில் நடித்து காட்டினார்.

அதனை போலீசார் வீடியோ காட்சியாக பதிவு செய்துள்ளனர். ஜெயக்குமார் கடந்த 10 ஆண்டுகளாக இந்த முறைகேட்டில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முறைகேடு மூலம் வ்ந்த பணத்தில் ஜெயக்குமார் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை வாங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. சென்னை முகப்பேர் மற்றும் ஆவடியில் 3 வீடுகள் அவருக்கு சொந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. முறைகேடுகளை அரங்கேற்றுவதற்காக ஜெயக்குமார் சென்னை அண்ணா நகரில் ஆல் சக்சஸ் என்ற பெயரில் தனியாக அலுவலகம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணை அடிப்படையில் சில முக்கிய புள்ளிகள் கைதலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: