×

சபரிமலை மட்டுமின்றி அனைத்து மத வழிபாடு சுதந்திரம் தொடர்பாக விசாரிக்கப்படும்: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

டெல்லி: சபரிமலை மட்டுமின்றி அனைத்து மத வழிபாடு சுதந்திரம் தொடர்பாக விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. மத விவகாரத்தில் எந்த அளவுக்கு பொதுநல வழக்குகள் தொடுக்க அனுமதி என்பதை குறித்தும் விசாரிக்கப்படும்.. பெண்களுக்கான மத வழிபாட்டு உரிமை, சுதந்திரம் குறித்து விசாரிக்க உள்ளோம் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே அறிவித்துள்ளார். சபரிமலை விவகாரத்தை 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றியது சரியே என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 9 நீதிபதிகள் அமர்வு நாளை மறுநாள் முதல் விசாரணை நடத்தும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

Tags : Sabarimala ,Supreme Court , Sabarimala
× RELATED பங்குனி உத்திர திருவிழா சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு