×

கொரோனா உயிர்கொல்லி வைரஸ் வேகமாக பரவும் அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 17வது இடம்

டெல்லி : கொரோனா உயிர்கொல்லி வைரஸ் எளிதில் பரவக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவை தவிர்த்து கொரோனா வைரஸ் வேகமாக பரவும் அபாயம் உள்ள 30 நாடுகளின் பட்டியலை பெர்லினில் உள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகம்  வெளியிட்டுள்ளது. ராபர்ட் கோச் நிறுவனம் மற்றும் ஹம்போல்ட் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் தாயலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகியன நாடுகளில் கொரோனா வேகமாக பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியா 17வது இடத்தில் இருக்கிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா விமான நிலையங்களில் இருந்து கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடிய அபாயம் இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகள் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆய்வு முடிவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 1,486 பேர் ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 1,636 விமான நிலையங்களில் இந்தியா வந்த 1 லட்சத்து 76,703 பேருக்கு விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.  

தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தைவான், அமெரிக்கா, வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் கம்போடியா ஆகியவை கொரோனா உயிர்கொல்லி வைரஸ் வேகமாக பரவும் அபாயம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில், புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூலம் கொரோனா வைரஸ் எளிதில் பரவக்  அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய விமான நிலையங்கள் உள்ளன.இதனிடையே சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கும் மொத்தம் 908 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 2002-03ம் ஆண்டில் சார்ஸ் வைரஸ் தாக்குதலின்போது சீனாவில் 700 பேர் பலியாயினர். அதை கொரோனா மிஞ்சிவிட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : countries ,India , Corona, Biochemistry, Virus, India, List, China, Humboldt University, Robert Koch
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...