×

சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை ஜோக்கர் படத்தில் நடித்த வாக்கின் பீனிக்ஸ் வென்றார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கியது. இந்த விருது விழாவை உலகமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டு ஹாலிவுட் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. ஹாலிவுட் சினிமாவின் உயரிய விருது விழாவான இதில், கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த விழா கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெற்று வருகிறது.

விருதுகள் விவரம்:

* சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை ஜோக்கர் படத்தில் நடித்த வாக்கின் பீனிக்ஸ் வென்றார்
* சிறந்த நடிகைக்கான  ஆஸ்கார் விருதை ஜூடி படத்தில் நடித்த ரென்னி வென்றார்
* சிறந்த பின்னணி இசைக்கான ஆஸ்கர் விருதினை வென்றது ஜோக்கர் திரைப்படம்
* சிறந்த சர்வதேச படத்திற்கான ஆஸ்கார் விருதை வென்றது கொரியா படமான பாரசைட்
* சிறந்த அனிமோஷன் குறும்படத்துக்கான விருதை தட்டி சென்றது ஹேர் லவ்.
* சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை தட்டி சென்றது ஜோஜோ ராபிட் திரைப்படம்.
* நடிகர் பிராட்பிட்டுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது.
* லாரா டெர்ன்-க்கு சிறந்த துணை நடிகைக்கான விருது.
* சிறந்த ஆடை வடிவமைப்புக்கான விருது லிட்டில் வுமன் திரைப்படத்திற்காக ஜாக்குலின் டுரனுக்கு வழங்கப்பட்டது.
* சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருது ஒன்ஸ் அப் ஆன் அ டைம் இன் ஹாலிவுட் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது.
* அமெரிக்கன் ஃபேக்டரி திரைப்படத்திற்கு சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கார் விருது.
* THE NEIGHBOURS WINDOW திரைப்படத்துக்கு சிறந்த அக்ஷன் குறும்படத்துக்கான விருது.
* சிறந்த ஒலி கலவைக்கான விருதை ‘1917’ திரைப்படம் வென்றது.
*  சிறந்த ஒலித்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதை போர்ட் v பெராரி திரைப்படம் வென்றத.
*  டாய் ஸ்டோரி-4 திரைப்படத்துக்கு சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது.
* 1917 திரைப்படத்துக்கு சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் என 3 பிரிவுகளில் ஆஸ்கர் விருதை பெற்றது.
* சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்துக்கான ஆஸ்கர் விருதை பாம் ஷெல் திரைப்படம் தட்டிச் சென்றது.
* சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருதினை வென்றது ராக்கெட் மேன் திரைப்படத்தில் இடம்பெற்ற LOVE ME Again பாடல்..!



Tags : Walker Phoenix ,Oscar Award Ceremony ,Los Angeles , The 92nd ,Oscar Award ,Ceremony, Los Angeles
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்