×

காதல் மனைவிக்கு தெரியாமல் 2ம் திருமணம் செய்த காவலர் தலைமறைவு: போலீசில் பரபரப்பு புகார்

அண்ணாநகர்:  சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜா (27) என்கிற போலீஸ்காரரும், நானும் சுமார் 2 ஆண்டாக காதலித்தோம். பின்னர் கடந்த 27.10.2017 அன்று சென்னை, வடபழனி முருகன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டோம். பின்னர், பாடி திருமங்கலத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். எங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, உடல் நிலை சரி இல்லாமல் இறந்துவிட்டது. அதன் பின்பு என்னுடன் கணவர் சரிவர  பேசவில்லை. அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் செல்போனை ஆய்வு செய்தேன். அப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட படம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதுகுறித்து, கணவரிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணான பதில் கூறினார்.

இந்நிலையில் எனது கணவர் ராஜபாளையத்தில் 45 நாள் பயிற்சி எடுப்பதாக கூறிவிட்டு கடந்த நவம்பர் மாதம் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. விசாரித்தபோது சிவகங்கையில் எனக்கு தெரியாமல் 2வது திருமணம் செய்து கொண்டு ஆவடி காவலர் குடியிருப்பில் அவருடன் குடும்பம் நடத்துவது எனக்கு தெரியவந்தது. எனவே அவரை மீட்டு கொடுங்கள். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று ராஜா மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த காவலர் ராஜா தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர்.

Tags : Love ,guard ,guardian , Love wife, unknowingly, 2nd marriage, guardian, headgear
× RELATED ஹீரோவுடன் யாஷிகா காதலா?