×

ஆலந்தூரில் குறைகேட்பு முகாம் மக்கள் பிரச்னைக்கு உடனுக்குடன் தீர்வு: தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ உறுதி

ஆலந்தூர்: சென்னை ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி மக்களின் குறைகேட்பு முகாம் ஆலந்தூர் 12வது மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி ஆணையர் முருகன், செயற்பொறியாளர்கள் ஸ்ரீதர், உமாபதி முன்னிலை வகித்தனர். மணப்பாக்கத்தை சேர்ந்த சக்ரவர்த்தி என்பவர், ‘‘மணப்பாக்கத்தில் மாநகராட்சியின் வெள்ள தடுப்பு கால்வாய் மீது ஒரு தனியார் நிறுவனத்தினர் பாலம் கட்டுகின்றனர்’’ என்று புகாரளித்தார். மேலும், ‘‘எல்.அண்ட்.டி காலனியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி, தனிநபர் லாரிகள் மூலம் விற்பனை செய்கிறார்’’ என அப்பகுதி பொதுநல சங்க பெண் நிர்வாகி புகார் கூறினார்.

நந்தம்பாக்கத்தில் துளசிங்கபுரம், கணபதிபுரம் காலனி பகுதிகளில் குப்பை குவிந்திருப்பதால், பன்றி தொல்லை அதிகரித்துள்ளது. பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் மக்களுக்கு தொல்ைல கொடுக்கும் குரங்குகளை பிடிக்க வேண்டும் என்று பொதுநல சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். நங்கநல்லூர், பழவந்தாங்கல் பகுதிகளில் பாதாள சாக்கடையின் உடைந்து போன மேல்மூடிகளை அகற்றிவிட்டு புதிதாக பொருத்த வேண்டும் என்பது உள்பட ஆலந்தூர் 12வது மண்டலத்தில் நிலவும் அடிப்படை பிரச்னைகள் குறித்து முன்னாள் கவுன்சிலர்கள் புகாரளித்தனர். இதன்பிறகு தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ கூறுகையில், ‘‘அடிப்படை வசதி பிரச்னைகள் குறித்து புகார் அளித்துள்ளனர். குரங்கு, பன்றிகள் தொல்லை குறித்து பெண்கள் மனு வழங்கினர். இந்த கோரிக்கை மனுக்களை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் ஆய்வு செய்து விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி ேகட்டுள்ேளன். இப்பணிகள் விரைவில் செய்து முடிக்கப்படும்’’ என்றார். இந்த முகாமில் பகுதி செயலாளர்கள் குணாளன், சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் ஜெயபால், லியோ பிரபாகரன், வட்ட செயலாளர்கள் கேஆர்.ஜெகதீஸ்வரன், முரளிகிருஷ்ணன், நடராஜ், வேலவன் மற்றும் பொதுநல சங்க நிர்வாகிகள் அகஸ்டின், ரமேஷ், எம்வி.குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Alandur ,Govt ,grievance camp , Alandur, grievance camp , immediately settled , problem of the people
× RELATED நங்கநல்லூர் வாக்குச்சாவடியில் தேர்தல் அதிகாரி ஆய்வு