காங்கிரஸ், பாஜ ஆட்சியில் கவிஞர் ரவிதாசை கவுரவிக்கவில்லை: மாயாவதி குற்றச்சாட்டு

லக்னோ: பதினான் காம் நூற்றாண்டை சேர்ந்தவர் சமுதாய புரட்சி கவிஞர் ரவிதாஸ். இவர், வட இந்தியாவில் பக்தி இயக்கங்களை தோற்றுவித்தவர். உபி.யின் வாரணாசியில் உள்ள, குரு ரவிதாஸ் ஜனம் ஆஸ்தான் மந்தரில் நேற்று அவரது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், நேற்று வாரணாசி வந்து ரவிதாஸ் நினைவிடத்தில் வழிபாடு நடத்தினார்.

இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உபி முன்னாள் முதல்வருமான  மாயாவதி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘காங்கிரஸ், பாஜ தலைவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் ரவிதாசுக்கு மரியாதையோ, கவுரவமோ அளிக்கவில்லை. ஆனால், ஆட்சி அதிகாரத்தைவி ட்டு சென்ற பின்னர் தங்கள் சுயநலனுக்காக கோயில்களுக்கும், பிற இடங்களுக்கும் சென்று பார்வையிட்டு  நாடகமாடுகின்றனர். ஆட்சிக் காலத்தில் ரவிதாசுக்கு பல மரியாதை அளித்தது பகுஜன் சமாஜ் மட்டும்தான். எதிர்க்கட்சிகள் இதனை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கின்றன’ என கூறியுள்ளார்.

Related Stories:

>