×

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான மம்தா புத்தகம் விற்று தீர்ந்தது

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக புத்தகம் ஒன்றை எழுதினார். குடியுரிமை பற்றிய பயம் என்ற தலைப்பில் மம்தா எழுதியுள்ள இந்த புத்தகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு குறித்த கருத்துக்கள் இடம்பெற்றது. இது, கொல்கத்தாவில் கடந்த 4ம் தேதி தொடங்கிய சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டது. 12 நாட்கள் நடந்த இந்த புத்தக கண்காட்சி  நேற்றுடன் முடிந்தது. இதில், மம்தாவின் 1000 புத்தகங்கள் விற்பனை ஆகிவிட்டது. இது பற்றி புத்தக வெளியீட்டாளர்கள் சார்பில் அபு தேய் கூறுகையில், ‘‘இந்த புத்தகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தின் காரணமாக காட்டு மிராண்டித்தனமான நிச்சயமற்ற நிலை அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்து இடங்களிலும் ஏற்பட்டதாக மம்தா புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சமகாலத்தில் நிலவும் பிரச்னைகள் குறித்த அவருடைய கவிதை புத்தகமும் கண்காட்சியில் விற்கப்பட்டது’’ என்றார்.


Tags : Mamta , Citizenship law, Mamta Book, sold out
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன்...