×

காட்சி போட்டியில் பான்டிங் அணி வெற்றி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் பேரழிவை ஏற்படுத்திய காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் நடத்தப்பட்ட காட்சிப் போட்டியில் பான்டிங் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற கில்கிறிஸ்ட் லெவன் அணி முதலில் பந்துவீசியது. பான்டிங் லெவன் அணி 10 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்தது. ஹேடன் 16, பான்டிங் 26 ரன் (14 பந்து, 4 பவுண்டரி), பிரையன் லாரா 30 ரன் (11 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். கில்கிறிஸ்ட் அணி பந்துவீச்சில் யுவராஜ், வால்ஷ், சைமண்ட்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய கில்கிறிஸ்ட் அணி 10 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் தோற்றது. கேப்டன் கில்கிறிஸ்ட் 17, வாட்சன் 30 ரன் (9 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), சைமண்ட்ஸ் 29 ரன் (13 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினர். பான்டிங் அணியின் பயிற்சியாளராக சச்சின் டெண்டுல்கர் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் மூலமாக சுமார் 37 கோடி நிதி திரட்டப்பட்டதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.


Tags : team ,Banting ,match ,Ponting , Visual match, Ponting, team win
× RELATED இன்சுலின் வழங்க கோரிய மனு தள்ளுபடி...