×

கொலை, கஞ்சா வழக்கில் தொடர்புடைய 14 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். அதன்படி தரமணி, வி.வி.கோயில் தெருவை சேர்ந்த கார்த்திக் (எ) ஸ்டப்  கார்த்திக் (24) மற்றும் கல்லுக்குட்டை, சூர்யா (எ) புறா (25), கீழ்ப்பாக்கம், மண்டபம் ரோடு, 6வது தெருவை சேர்ந்த லோகநாதன் (எ) பாபு (28), கொடுங்கையூர், எழில்நகர் 17வது தெருவை சேர்ந்த மணிகண்டன் (30),  திருவொற்றியூர், ஹன்ஷா அப்பார்ட்மெண்ட் பகுதியை சேர்ந்த கணேஷ்குமார், கொருக்குப்பேட்டை, பெருமாள் (29), காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் தாலுகா, கைலாயூர் பகுதியை சேர்ந்த ஆனந்தராஜ் (27), வியாசர்பாடி, பெரியார்நகர், 16வது தெருவை சேர்ந்த நவீன் (எ) நரம்பு (22), கொடுங்கையூர், கைலாசம் தெரு, இந்திரா காந்தி நகரை சேர்ந்த தங்கராஜ் (23),  பெரம்பூர் கார்த்திக் (எ) பூச்சி (22), வியாசர்பாடி, சஞ்சய்நகர், 3வது தெருவை சேர்ந்த முகமது இம்ரான் (எ) ரபிக் (எ) சொல்யூஷன் ரபிக் (22), கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ள நிலையில் ஏற்கனவே 6 முறை குண்டர் சட்டத்தில் கைது ெசய்யப்பட்ட கன்னிகாபுரம், தாஸ் நகரை சேர்ந்த மாரி (எ) கொருக்குப்பேட்டை மாரி (33), போதை பொருள்தடுப்பு பிரிவில் கைது செய்யப்பட்ட எருக்கஞ்சேரியை சேர்ந்த ராஜா (32) ஆகிய குற்றவாளிகள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் 14 பேரையும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

Tags : murder ,persons , case , murder, ganja, 14 persons, kundas
× RELATED தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2...