×

கடந்த 2018-19ம் ஆண்டில் இந்தியாவில் 7.71 லட்சம் டன் ‘இ-வேஸ்ட்’ உற்பத்தி: கழிவுகளை உற்பத்தி செய்வோர் கண்காணிப்பு

சென்னை: உலக அளவில் மின்னணு பொருட்களின் பயன்பாடு அபரிவிதமான வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக வீட்டு உபயோக பொருட்கள், பொழுபோக்கு, நுகர்வோர் சாதனங்கள், தொலைதொடர்ப்பு போன்ற துறைகளில் அதிக அளவில் மின்னணு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இந்த சாதனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறுகிறது. இந்த கழிவுகளே ‘இ-வேஸ்ட்’ ஆகும். குறிப்பாக பயன்படுத்த முடியாத நிலையில் தூக்கி வீசப்படும் கம்ப்யூட்டரின் மானிட்டர்கள், மதர்போர்டுகள், மொபைல் போன்கள், சார்ஜர்கள், சிடி, ஹெட்போன்கள், டிவிகள், குளிர்சாதன பெட்டிகள், டார்ச் லைட்டுகள் மற்றும் விளையாட்டு பொருட்களின் உள்ளே பொருத்தப்பட்டிருக்கும் மின்னணு பொருட்கள், பேட்டரிகள் ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  அதிகரித்து வரும் மின்னணு கழிவுகளை அகற்றுவதற்கும், உற்பத்தியை கட்டுப்படுத்துவதற்கும் இந்தியா தீவிரம் காட்டி வருகிறது.

இங்கு கடந்த 2018-19ம் ஆண்டில் 7.71 லட்சம் டன் அளவிற்கு மின்னணு கழிவுகள் உற்பத்தியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் ‘இ-வேஸ்ட்’களை யார் அதிக அளவில் உற்பத்தி செய்கிறார்கள் என்பது குறித்து கண்காணிப்பதற்கும், அந்த கழிவுகளை எப்படி மறுசுழற்சி செய்கிறார்கள் என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டும் வருகிறது.மேலும் மின்னணு கழிவுகளை விலைக்கு வாங்குபவர்களின் விவரம், அவர்கள் அதை எப்படி மறுசுழற்சி செய்கிறார்கள் என்பது குறித்தும் கண்டறியப்பட்டு வருகிறது. அப்போது அலட்சியமாக இத்தகைய கழிவுகளை கையாள்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

காற்று மாசு அதிகரிப்பு
இந்தியாவில் மின்னணு கழிவுகள் மட்டும் அல்லாமல் மருத்துவக்கழிவுகளும் அதிக அளவில் உற்பத்தியாகிறது. இதில் குறிப்பிட்ட சதவீத கழிவு தீயிட்டு எரிக்கப்படுவதால் காற்றுமாசுபாடு அதிகரித்து வருகிறது. இதனால் காற்றுமாசு அதிகரித்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இப்பிரச்னை சென்னை வரையிலும் நீடித்தது. எனவே இவ்வாறு கழிவுகளை தீயிட்டு எரிப்பதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : India , 7.71 lakh, tonnes, e-waste product, producers
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...