×

வளமான நிலத்தை நச்சு பூமியாக்கும் பெட்ரோ கெமிக்கல் திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:கடலூர் மாவட்டத்தில் ஹால்டியா நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைத்தால் ₹50 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும். சுமார் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த நன்மைகளை விட பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் மிகவும் அதிகம் ஆகும். கடலூர் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் வேதி ஆலைகளில் இருந்து வெளியாகும் கழிவு நிலத்தில் கலந்ததால் நிலத்தடி நீரில் டயாக்சின் என்ற வேதிப்பொருள்   கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டதாகும்.  

நிலத்தடி நீரில் டயாக்சின் கலந்திருப்பதால் அப்பகுதிகளில் வளரும் தென்னை மரங்களில் காய்க்கும் இளநீரிலும் டயாக்சின் உள்ளது. இதையெல்லாம் கடந்து நிலத்தடி நீரை பயன்படுத்தும் தாய்மார்களின்  தாய்ப்பாலிலும் டயாக்சின் வேதிப்பொருள் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஹால்தியா ஆலை மட்டுமல்ல வளமான நிலத்தை நச்சு பூமியாக்கும் எந்த ஒரு பெட்ரோ கெமிக்கல் திட்டத்தையும், தமிழகத்தில் எந்த பகுதியிலும் அதிமுக அரசு அனுமதிக்க கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : government ,Ramadas ,land , Poisoning, Petrochemical , Ramadas urges, govt
× RELATED தமிழக அரசு, கட்சிகளுடன் கலந்துபேச...