×

எபோலா, நிபா போல கொரோனாவும் வராது: விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்

சீனாவில் இருந்து அண்டைநாடுகளான சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளில் கொரோனோ வைரஸ் நோய் தொற்று பரவ ஆரம்பித்தவுடன் தமிழக அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க துவங்கி விட்டது. நாம் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை விளைவாக நமக்கு பெரிய அளவில் பாதிப்பு தடுக்கப்பட்டது.  தொற்றுநோய், இருமல், மூச்சுவிடுவதன் மூலம் பரவக்கூடியது என்பதால் அனைத்து மருத்துவமனைகளிலும் முதலில் கொரோனாவுக்கு பாதுகாக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.  நாம் உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுத்து வந்த போது, அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் ஒருவருக்கு வைரஸ் பாதி்ப்பு என தகவல் வந்தது;  நிலைமையை அறிந்து உலக சுகாதார நிறுவனம் சுகாதார எமர்ஜென்சியாக அறிவித்து விட்டது. கேரளாவிலும் மாநில பேரிடர் அவசர நிலை அறிவிக்கப்பட்டு விட்டது. அந்த மாநிலத்தில் 3 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்தியாவில் புனேவில்தான் கொரோனா அறிகுறி குறித்து கண்டறியும் பரிசோதனை நிலையம் உள்ளது. அதாவது, ரத்த மாதிரி, தொண்டையில் இருமல் மாதிரி, மூக்கில் இருக்க கூடிய சளி மாதிரி பரிசோதனை செய்ய முடியும். இந்த பரிசோதனை வசதி தான் உடனடியாக தமிழகத்தில் கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் என்கிற ஆய்வு மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலில் கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டவர்கள் தொடர்பாக புனேவுக்கு மாதிரியை அனுப்பி வைத்து வந்தோம். ஆனால், தற்போது, கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் தான் கொரோனா அறிகுறி உடன் வந்தவர்களின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி 42 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 34 பேரின் மாதிரி பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது. 8 பேருக்கு வர வேண்டியுள்ளது. சீனா மற்றும் பாதிப்படைந்த நாடுகளில் இருந்து வந்த 1738 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்களை கண்காணித்து வருகிறோம். 5 பேர் மருத்துவமனையில் வைத்து கண்காணித்து வருகிறோம். அதனால், நாம் பதட்டமில்லாமல் இருக்கிறோம். அதே நேரத்தில் நாம் பயமில்லாமல் இருக்கக் கூடாது. அண்டை மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதால், நாம் மிகுந்த எச்சரிக்கை மற்றும் கவனத்துடன் இருக்க வேண்டும்.  அனைத்து பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது வரை தமிழகத்தில் எந்தவிதமான நோய் தொற்றும் இல்லை.

கொரோனா பாதிப்புடன் வருகிறவர்களை தனியாக வார்டில் வைத்து கண்காணித்து வருகிறோம். சீனாவில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அவர்களது மொபைல் எண்களை வாங்கி வைத்து கொண்டு அவர்களிடம் தினமும் தொடர்பு கொண்டு காய்ச்சல் இருக்கிறதா, சளி பிடித்து இருக்கிறதா அப்படியெனில் மருத்துவமனைக்கு வந்து விடுங்கள் என்று அறிவுறுத்தி கவனமாக பார்த்து வருகிறோம். அதனால், தான் தமிழகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. நோயாளிகளுக்கு என்ன அறிகுறி இருக்கிறதோ அதற்கான மருந்து தருகிறோம். காய்ச்சல் என்றால் காய்ச்சலுக்கு தருகிறோம், சளி என்றால் அதற்கான மருந்து தருகிறோம். மூச்சு திணறல் என்றால் அதற்கான மருந்து தருகிறோம். இதற்கென தனி மருந்து இல்லை. 1 லட்சத்துக்கு மேற்பட்ட முகமூடிகள் தயாராக உள்ளது. மூன்று அடுக்கு முகமூடி, பாதுகாப்பு உறைகள் ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளோம். தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் நம்மிடம் உள்ளது.  எல்லா சிகிச்சையையும் சொல்லி விட்டோம். எல்லோருடைய ஒத்துழைப்புடன் தான் செய்ய முடியும். எபோலா, நிபா வந்தபோது கூட தமிழகத்துக்கு வராமல் பார்த்துக்கொண்டோம். அதே போன்று இப்போதும் கொரோனா வைரஸ் பரவாமல்  பார்த்துக்கொள்வோம். 1 லட்சத்துக்கு மேற்பட்ட முகமூடிகள் தயாராக உள்ளது. மூன்று அடுக்கு முகமூடி, பாதுகாப்பு உறைகள் ஆர்டர் கொடுத்து வாங்கியுள்ளோம். தேவையான அனைத்து பாதுகாப்பு வசதிகளும் நம்மிடம் உள்ளது.

Tags : Corona ,Minister of Health ,Niba ,Tamil Nadu ,Vijaya Bhaskar , Like Ebola, Niba, Vijaya Bhaskar, Minister, Health ,Tamil Nadu
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...