×

டெங்கு விவகாரம் போல டாக்டர்களை மிரட்டக்கூடாது: டாக்டர் கலாநிதி வீராசாமி, வடசென்னை திமுக எம்.பி

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை வந்த வைரஸ் பாதிப்புகளுக்கு அறிகுறியை தடுக்க தடுப்பு மருந்து தரப்பட்டது. நோய் அறிகுறிகளை தடுக்க கூடிய மருந்தை தான் தற்போது வரை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். காய்ச்சல் என்றால் காய்ச்சல், மூச்சு திணறல் பாதிப்பு என்றால் அதற்கான மருந்து நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு என தனியாக மருந்து எதுவும் தர முடியாது; தடுக்கத்தான் மருந்து தர முடியும்.  சீனாவில் இருந்து அண்டை நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனாவைரஸ் நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனாவைரஸ் பாதிப்பு 3 பேருக்கு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாநிலம் அருகில் தமிழகம் இருப்பதால் நாமும் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்ைக எடுக்க வேண்டும். நமது மாநிலத்துக்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு வரக்கூடாது; அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது போதுமானதா என்பது கேள்விக்குறி தான்.

சீனாவிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. இது ஒரு கொடுமையான நோய். இது வந்தால் பேரழிவு ஏற்படும். எனவே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.  இதற்காக போர்க்கால அடிப்படையி–்ல் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். கேரளா மாநில எல்லையோர பகுதி மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு  விமானம் மற்றும் கப்பல் மூலம் வரும் பயணிகளை பரிசோதனை செய்த பிறகு மாநிலத்துக்குள் அனுமதிக்க வேண்டும். குறிப்பாக, எங்கெங்கெல்லாம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்டறிந்து, அவர்களிடம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் எங்கெல்லாம் செல்கிறார்கள், எங்கு இருக்கிறார்கள். அவர்களது தினசரி உடல் நிலை குறித்து இரண்டு வாரத்துக்கு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அதே போன்று கேரளா எல்லையில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

 இந்த அரசாங்கம் எதுவாக இருந்தால் மூடிமறைக்கத்தான் முயற்சி செய்வார்கள். அதாவது ஒரு சிலருக்கு (நோயாளிகளுக்கு) அறிகுறி இருப்பதாக கூறியுள்ளனர். என்னிடம் நிறைய டாக்டர்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர். டெங்கு பாதிப்பு வந்த போது எல்லா மருத்துவமனைக்கும் போனில் தொடர்பு கொண்டு, மிரட்டினார்கள். இது, மாதிரி கேஸ் இருந்தால் கூட தகவல் தெரிவிக்கக் கூடாது என்றார்கள். அந்த மாதிரி நிலைமை  இருக்கும் போது இந்த அரசாங்கம் உண்மையை சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.
தற்போது கொரோனா பாதிப்பு தொடர்பாக தினமும், அமைச்சர், அரசு செயலாளர் ஊடகங்களில் பேட்டி கொடுத்து கொண்டு வருகின்றனர். அவர்கள் கொரோனா  பாதிப்பு இல்லை என்று தொடர்ந்து கூறிக்கொண்டே வருகின்றனர். ஆனால் உண்மையில் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஐடியாவே இல்லை. அவர்களும் நம்மை போல் கொரோனாபாதிப்பு ஏதும் வரக்கூடாது என்று வேண்டிக்கொண்டு தான் இருக்கின்றனர். ஆனால், அது வந்தால் அதை எதிர்க்கொள்ளும் தகுதி இருக்கிறதா, வசதி வாய்ப்புகள் இருக்கிறதா என்று பார்த்தால் அது சந்தேகம் தான். இதுவரைக்கும் தமிழகத்தில் கொரோனாபாதிப்பு அறிகுறி இல்லை என்று தான் கூறி வருகின்றனர்.

ஒருவருக்கு கூட பாதிப்பு இருக்கிறது என்று இன்னும் ஊர்ஜிதம் ஆகவில்லை. ஆனால், கேரள மாநிலத்தில் அப்படி இல்லை. 3 பேருக்கு பாதிப்பு இருக்கிறது. எனவே, தான் அங்கு மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இப்போது வரை அது போன்ற நிலை இல்லாததால் அறிவிக்கப்படாமல் இருக்கலாம். அதே நேரத்தில் இந்த அரசு தமிழகத்தில் நோய் வராமல் இருக்கும் வகையில் தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு பாதிப்பு வந்த போது எல்லா மருத்துவமனைக்கும் போனில் தொடர்பு கொண்டு, மிரட்டினார்கள். இது, மாதிரி கேஸ் இருந்தால் கூட தகவல் தெரிவிக்கக் கூடாது என்றார்கள். அந்த மாதிரி இருக்கும் போது இந்த அரசாங்கம் உண்மையை சொல்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

Tags : Veerasamy ,Doctors ,DMK ,MP Doctors ,Dr , dengue , Doctors , intimidated, Dr, Dr. Veerasamy, DMK MP
× RELATED ஆற்காடு வீராசாமி பிறந்தநாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து