×

டிஎன்பிஎஸ்சி முறைகேடு யாராக இருந்தாலும் நடவடிக்கை: திருமாவளவன் எம்பி வலியுறுத்தல்

ராஜபாளையம்:  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே முரம்பில் உலக தமிழ்க் கழகத்தின் சார்பில், மொழி ஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணரின் 119வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கலந்து கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. அளித்த பேட்டி:பிப். 22ல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில், திருச்சியில் நடைபெற உள்ள ‘தேசம் காப்போம்’ பேரணியில் அனைத்து தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளது.

இந்த முறைகேட்டில் தொடர்புடையவர்கள் அமைச்சர் உள்ளிட்ட யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த காவல்துறை வாய்மொழி அனுமதி அளிக்கிறது. பிறகு போராடுபவர்கள் மீது வழக்கு போடுகிறது. மத்திய அரசிடம் நல்ல பெயர் வாங்க, போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப் போடுவதை தனது கடமையாக காவல்துறை செய்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags : anyone ,DNPSC ,Thirumavalavan MP ,Whom , DNBSC ,abuse, Whom, Thirumavalavan MP ,insists
× RELATED டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வர்களுக்கு இலவச வகுப்புகள்: கலெக்டர் தகவல்