×

சேலம் அருகே துணிகரம் தனியார் சொகுசு பஸ்சில் 1 கோடி நகை கொள்ளை

சேலம்: சேலம் அருகே தனியார் சொகுசு பஸ்சில், நகைக்கடை ஊழியர் எடுத்து வந்த ₹1 கோடி மதிப்புள்ள நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். கோவையில் செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடை ஊழியர் கவுதம் (25). இவர், ஐதராபாத்தில் உள்ள பிரதான கடையில் இருந்து ₹1 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை ஒரு பேக்கில் எடுத்துக் கொண்டு, நேற்று முன்தினம் இரவு தனியார் சொகுசு பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார். அந்த தனியார் சொகுசு பஸ், நேற்று காலை 10.30 மணியளவில் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதிக்கு வந்தது. அங்கு பயணிகள் காலை உணவு சாப்பிட ஒரு ஓட்டல் முன் பஸ்சை டிரைவர் நிறுத்தினார்.

அப்போது, ஊழியர் கவுதம் இறங்கி சாப்பிடச் சென்றார். பின்னர், 10 நிமிடத்தில் திரும்பி வந்து பார்த்தபோது, ₹1 கோடி மதிப்புள்ள நகையை காணவில்லை. மர்மநபர்கள், அதனை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுபற்றி கவுதம், சங்ககிரி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வந்து  நகையை பறிகொடுத்த கவுதமிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் நகை கொண்டு வரப்படுவதை அறிந்த நபர்கள், பின்தொடர்ந்து வந்து இக்கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதனால், சுங்கச்சாவடி பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.ஏற்கனவே, கோவை திருநகர் 2வது வீதியை சேர்ந்த தங்க நகை வியாபாரி மகன் ஹரிஷ்(32), கடந்த டிசம்பர் 10ம் தேதி இதே வைகுந்தம் சுங்கச்சாவடி பகுதியில், சொகுசு பஸ்சில் கொண்டு வந்த ₹1 கோடி பணத்தை பறிகொடுத்தார். தற்போது மீண்டும் தனியார் சொகுசு பஸ்சில், அதே இடத்தில் ₹1 கோடி மதிப்பிலான நகை கொள்ளை போயுள்ளது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Tags : Salem ,jewelery robbery ,Venture , Venture ,Salem,jewelery ,robbery
× RELATED தள்ளாத வயதிலும் கவனம் ஈர்த்த தலையாய...