×

சீனாவில் இருந்து காரைக்காலுக்கு வந்த 3 மாணவர்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதலா?: வீட்டில் தனி அறையில் வைத்து தீவிர கண்காணிப்பு

காரைக்கால்: காரைக்காலில் 3 மாணவர்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதா என்பது குறித்து அவர்களை வீட்டில் தனிஅறையில் வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் மாவட்ட நலவழித்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.சீனாவில் கொரோனா வைரஸில் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், சீனாவிலிருந்து காரைக்கால் வந்த 3 மாணவர்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா வைரஸ் சந்தேகம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியதல் பேரில், மாவட்ட நலவழித்துறை துணை இயக்குநர் டாக்டர் மோகன்ராஜ் தலைமையில் ஊழியர்கள், அந்த 9 பேரையும் அவர்களுடைய வீட்டில் வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து துணை இயக்குநர் மோகன்ராஜ் கூறுகையில், சீனாவிலிருந்து காரைக்கால் வந்த 9 பேர், அவரவர்களின் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு தனிஅறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை அந்தந்த பகுதி நலவழித்துறையின் தனிக்குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அறிகுறிகளுடன் இருந்த ஒரு குழந்தைக்கு ரத்த மாதிரி எடுத்து, சென்னை கிண்டியில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம். பரிசோதனை முடிவு ஓரிரு நாட்களில் வந்துவிடும்.இவர்கள் அனைவரும் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்படுவார்கள். அதன் பிறகு இயல்பாக செயல்பட அனுமதிக்கப்படுவார்கள். இதுவரை காரைக்கால் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.



Tags : China ,Karaikal ,room ,home ,Cameron , Karaikal , China, Intensive,separate , home
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...