×

கோவையில் மாநில மாநாடு தபால்துறையில் ஆள் குறைப்பு கைவிடக்கோரி தீர்மானம்

கோவை: தபால்துறையில் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி கோவையில் நடந்த அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்க மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் குரூப் ‘சி’’ தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் 39வது தமிழ் மாநில மாநாடு கோவை தெலுங்குபாளையத்தில் நேற்று நடந்தது. மாநாட்டில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட் டத்தை சேர்ந்த அஞ்சல் ஊழியர்கள் பங்கேற்றனர். இதில், தபால்துறையில் ஆள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும்.

பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கும் சேமிப்பு கணக்கு துவங்க குறைந்தபட்சத் தொகை ₹50ல் இருந்து ₹500 ஆக உயர்த்தி இருப்பதை குறைக்க வேண்டும். அஞ்சல் ஊழியர்கள் தற்போது வங்கி பணிகளை சேர்த்து செய்வதால், வங்கிகளை போல் மாதத்தின் 2வது சனி மற்றும் 4வது சனி விடுமுறை அளிக்க வேண்டும். மேலும், அஞ்சல்துறையில் உள்ள தொழில்நுட்ப கோளாறுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : State Convention ,State Conference , State ,Conference,Goa,Reduction ,Postage
× RELATED மதுரையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில மாநாடு