×

புதுகை சிறையில் போலீசார் 1 மணி நேரம் அதிரடி ரெய்டு

புதுக்கோட்டை:  புதுக்கோட்டை சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 163 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போல் சிறை வளாகத்தில் உள்ள பாஸ்டல் பள்ளியில் 7 சிறார்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.  இங்கு, 50 போலீசார் நேற்று காலை மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். கைதிகளின் அறை, குளிக்கும் அறை, கழிவறைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.  செல்போன்கள், போதை பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை கைதிகளிடம் உள்ளதா? என சோதனை நடந்தது. ஒரு மணி நேரம் நீடித்த இந்த சோதனையில் எந்த பொருட்களும் கைப்பற்றப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.


Tags : raid , Pudukkai ,cops raid ,
× RELATED 6 நாட்கள் சோதனையில் பறக்கும் படையினரால் ரூ.9.32 கோடி பறிமுதல்