×

பள்ளிக்கு சென்றபோது மொபட் மீது பஸ் மோதல் நண்பரின் மகள் பரிதாப சாவு அழைத்து சென்றவர் தற்கொலை: வேளாங்கண்ணியில் சோகம்

நாகை: பள்ளிக்கு மொபட்டில் அழைத்து சென்ற போது, பஸ் மோதி நண்பரின் மகள் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அழைத்துச் சென்றவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பூக்கார தெருவை சேர்ந்த மதியழகன் மகள் மகரஜோதி (16). இவர் நாகூரில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் வீரமணி (50). மதியழகனின் நண்பர். நேற்றுமுன்தினம் காலை சிறப்பு வகுப்புக்கு பள்ளி வாகனம் வர தாமதம் ஆனதால் மகரஜோதியை வீரமணி தனது ெமாபட்டில் பள்ளிக்கு அழைத்து சென்றார். நாகை கிழக்கு கடற்கரை சாலை பரவை என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றபோது, வேளாங்கண்ணியில் இருந்து சென்னை சென்ற அரசு விரைவு பஸ், மொபட் மீது மோதியது. இதில் மகரஜோதி படுகாயம் அடைந்தார். வீரமணி லேசான காயத்துடன் தப்பினார். நாகை அரசு தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு ெசன்றபோது, டாக்டர்கள் பரிசோதித்து மகரஜோதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தன் கண் முன் நண்பரின் மகள் இறந்தது தாங்க முடியாமல் வீரமணி புலம்பி கொண்டே இருந்தார்.  இரவு வீட்டில் தூங்கிய வீரமணியை நேற்று அதிகாலை காணவில்லை. அவரது மனைவி புஷ்பாவதி அங்குமிங்கும் தேடினார். இந்நிலையில் தெற்கு பொய்கை நல்லூர் அருகே மண்டுவாக்கரை சவுக்குத்தோப்பில் வீரமணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags : school ,tragedy ,suicide ,Velankanni , Bus collides,friend, daughter, Velankanni
× RELATED “எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி” நாளை முதல் சிறப்பு தூய்மை பணிகள்