×

சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர அனுமதி கிடையாது: இந்திய விமான போக்குவரத்துறை இயக்குநர் தகவல்

டெல்லி: சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர அனுமதி இல்லை என விமான போக்குவரத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார். சீனாவின் ஹூபெய் மாகாணத்தின் வுகான் நகரில் கடந்த டிசம்பரில் இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சார்ஸ் போன்ற ஆட்கொல்லியான இந்த வைரஸ் தாக்குதலுக்கு மக்கள் கொத்து கொத்தாக பலியாகி வருகின்றனர். அதன் அடிப்படையில் பலியானோர் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன.

கடந்த 2002-2003ம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. சீனாவைத் தொடர்ந்து ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூரில் வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் விமானம் மற்றும் கப்பல் மூலம் சீனாவிலிருந்து வருபவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய எல்லைப் பகுதிகளான நேபாளம், பூடான், வங்கதேசம் மற்றும் மியான்மர் நாட்டினருக்கும் இது பொருந்தும்.

இந்தியாவில் இருந்து சர்வதேச விமானங்களை இயக்கும் அனைத்து இந்திய மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கும்இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விசாக்களையும் இந்தியா நிறுத்தி உள்ளதால், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் கட்டாயம் அவர்கள் இந்தியா வர வேண்டும் என்றால் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அல்லது ஷாங்காயில் உள்ள தூதரகத்தை அனுகலாம்.

இந்த விசா கட்டுப்பாடு சீன நாட்டினருக்கு மட்டுமின்றி, சீனாவில் இருந்து வரும் அனைத்து வெளிநாட்டினருக்கும் பொருந்தும் எனவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவிலிருந்து இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.


Tags : Foreigners ,Indian Airlines ,China ,India ,Director Foreigners , China, India, no permit, Director of Indian Aviation
× RELATED சொல்லிட்டாங்க…