×

ஆளாளுக்கு கருத்து கூற முதல்வர் எடப்பாடி தடை: அமைச்சர் தகவல்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பேட்டியளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் குரூப் 2 ஏ தேர்வில் நடந்த முறைகேடு, நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை பற்றியும், அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறித்தும் நிருபர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர், ‘‘ஏம்பா அதுக்கு நான்தான் கிடைச்சனா? தண்ணீர், ரோடு, லைட் வேண்டும் என்று கேட்டால் பதில் சொல்வேன். அபீசியல் ஆர்கன் மிஸ்டர் ஜெயக்குமார் சொல்வதுதான் அதிகாரப்பூர்வமானது. மற்றவர்கள் ஆளாளுக்கு ஒன்று சொல்லக்கூடாது என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்’’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து நழுவி விட்டார்.

Tags : Chief Minister ,Edappadi , Chief Minister Edappadi, Prohibition and Minister
× RELATED முதல்வர் எடப்பாடி யுகாதி தின வாழ்த்து