×

திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: தஞ்சாவூர், ஒரத்தநாட்டை சேர்ந்தவர் சண்முகப்பிரியா (33). இவருக்கும், தாம்பரம் பகுதியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வரும் விவேக் என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் நுங்கம்பாக்கம் குமரப்பா தெருவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் விவேக் பணிக்கு சென்றுள்ளார். வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்த விவேக் கதவை நீண்ட நேரம் தட்டியும் திறக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது,

படுக்கை அறையில் சண்முகப்பிரியா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்து வந்த நுங்கம்பாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து என்ன காரணத்துக்காக அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide ,Police investigation , Youth, suicide, police investigations
× RELATED திருமணத்திற்கு ஏற்பாடு செய்ததால் ரயிலில் பாய்ந்து இளம்பெண் தற்கொலை