×

முகப்பேரில் புதிய திட்டம் காசாகிராண்ட் டூடோர் அடுக்குமாடி விற்பனை: ரூ58 லட்சம் முதல் வீடுகள் வாங்கலாம்

சென்னை: காசா கிராண்ட் கட்டுமான நிறுவனம், பல்வேறு வகையான குடியிருப்புகளை கட்டி குறைந்த விலையில் வழங்கி வருகிறது. அதன்படி,  சென்னை முகப்பேரில் ‘டூடோர்’ என்ற பெயரில் நவீன அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது தொடங்கப்பட்டுள்ளது. 6.31 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளுடன் கட்டப்படும் இந்த அப்பார்மென்ட்டில் மொத்தம் 441 வீடுகள் கட்டப்படுகின்றன. முதல் கட்டத்தில் 259 வீடுகள் கட்டப்படுகின்றன. 21 மாதங்களில் இத்திட்டம் நிறைவடையும். தற்போது, 2 படுக்கை அறை வீடுகள் 80ம், 3 படுக்கை அறை வீடுகள் 87ம், 4 படுக்கை அறை வீடுகள் 15ம் விற்பனைக்கு உள்ளன. சலுகை விலையாக முதல் 25 முன் பதிவுகளுக்கு சதுரடி ரூ5799/-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரூ58 லட்சம் முதல் ரூ1.34 கோடி வரை இங்கு வீடுகள் வாங்கலாம். முகப்பேரில் இருந்து அண்ணா நகருக்கு 10 நிமிடத்தில் செல்லலாம். அண்ணாநகரில் ஒரு சதுரடி ரூ15 ஆயிரம். இதில் 3ல் ஒரு பங்கு விலையில் முகப்பேரில் காசாகிராண்ட் நிறுவனம் வீடுகளை விற்பனை செய்கிறது. இதுகுறித்து காசாகிராண்ட் விற்பனைப் பிரிவு செயல் துணைத் தலைவர் ஈஸ்வர் கூறுகையில்,‘பல்வேறு சிறப்பு வசதிகளுடன் அமைக்கப்படும் இந்த  அபார்ட்மென்ட் அனைத்து தரப்பு மக்களுக் கும் ஏற்ற வகையில் இருக்கும்,’’ என்றார்.


Tags : Homes ,Casa Grande Tudor Apartments ,Kasagrand Tudor Apartments , Casagrand Tudor, Apartment Sales
× RELATED விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த,...