×

லோக் அதாலத்தில் சுமார் 2 லட்சம் வழக்குகள் விசாரணை 50,266 வழக்குகளில் தீர்வு ரூ398 கோடி பைசல்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த லோக் அதாலத்தில் 50,266 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ397 கோடியே 60 லட்சத்து 59ஆயிரத்து 218 பைசல் செய்யப்பட்டது. தேசிய சட்டபணிகள் ஆணை குழுவின் உத்தரவின் படி நீண்ட நாட்களாக நீதிமன்றங்களில் நிலுவையில் கிடக்கும் வழக்குகளை முடித்து வைப்பதற்காக மக்கள் நீதிமன்றம் எனப்படும் லோக் அதாலத் நடத்தப்படுகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. அதில் வழக்கு தொடராமல் சட்டபணிகள் ஆணை குழுவிடம் மனு கொடுத்துள்ள தொழிலாளர்கள் தொடர்பான வழக்குகள், மின் கட்டணம், தண்ணீர் கட்டணம் தொடர்பான வழக்குகள், பராமரிப்பு தொடர்பான வழக்குகள் என பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

இதேபோல் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும், நில அபகரிப்பு, வருவாய்த்துறை, பணம் மீட்பு, விவாகரத்தை தவிர்த்து கணவன் மனைவியிடையேயான மற்ற வழக்குகள் என பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன. இதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் 4 அமர்வுகளும், மதுரை கிளையில் 4 அமர்வுகளும், மாநில சட்டபணிகள் ஆணை குழுவில் 18 அமர்வுகளும், அனைத்து மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவில் 481 அமர்வுகளும் என மொத்தம் தமிழகம் முழுவதும் 507 அமர்வுகள் அமைக்கப்பட்டன. இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் 1 லட்சத்து 71 ஆயிரத்து 817 வழக்குகள், நீதிமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யாமல் மனு கொடுத்துள்ள 71 ஆயிரத்து 401 வழக்குகளும் விசாரிக்கப்பட்டது.

மொத்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சுமார் 2 லட்சத்து 43,218 வழக்குகளில் 50,266 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ397 கோடியே 60 லட்சத்து 59ஆயிரத்து 218 பைசல் செய்யப்பட்டது. சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த லோக் அதாலத்தில் 15,567 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 11,396 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ41 கோடியே 36 ஆயிரத்து 97 பைசல் செய்யப்பட்டது.


Tags : Lok Adalam, Faisal
× RELATED பார்க்கிங் பகுதிகளுக்கு புதிய...