×

இந்து சமய அறநிலையத்துறையில் புதிதாக 73 செயல் அலுவலர்கள் நியமனம்: கமிஷனர் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை நிர்வகிக்க இணை ஆணையர் 11, துணை ஆணையர் 9, உதவி ஆணையர் 27, செயல் அலுவலர் நிலை 1 66, செயல் அலுவலர் நிலை 2 111, செயல் அலுவலர் நிலை 3 250, செயல் அலுவலர் நிலை 4 154 என மொத்தம் 628 பணியிடங்கள் உள்ளது. இதில், 200க்கும் மேற்பட்ட செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், ஒரு செயல் அலுவலர் 10 முதல் 20 கோயில்கள் வரை நிர்வகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து, அறநிலையத்துறை சார்பில் 2017-19 ஆண்டுகளுக்கான செயல் அலுவலர் காலி பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சியடைந்த 73 பேரை பணி நியமனம் செய்து கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, செயல் அலுவலர் வனிதா பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரியம்மன் கோயில், செயல் அலுவலர் தேன்மொழி கோவை பிரசன்ன விநாயகர் கோயில், செயல் அலுவலர் ஜீவானந்து மணப்பாறை முனியப்பசுவாமி கோயில், செயல் அலுவலர் மலைவாசன் காஞ்சிபுரம் உலகளந்தபெருமாள் கோயில், செயல் அலுவலர் சுப்பையா நெல்லை தொண்டர்கள் நயினார் கோயில், செயல் அலுவலர் கார்த்திலட்சுமி தென்காசி கோபாலகிருஷ்ணசாமி கோயில், செயல் அலுவலர் சூரியன் லால்குடி கைலாசநாதர் பெருமாள் ேகாயில், செயல் அலுவலர் சுமித்ரா உத்திரமேரூர் பாலசுப்பிரமணியசுவாமி கோயில், செயல் அலுவலர் தீபா திருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் கோயில்,

செயல் அலுவலர் சரவணன் கும்மிடிப்பூண்டி வரமுக்தீஸ்வரர் கோயில், செயல் அலுவலர் பிரபாகரன் திருவள்ளூர் அருகே கூவம் திரிபுராந்தகசுவாமி கோயில், செயல் அலுவலர் ச.தேன்மொழி செங்கம் வேணுகோபால்சுவாமி கோயில் என மொத்தம் 73 செயல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில், செயல் அலுவலர்கள் பயிற்சி முடிவுற்றதும் நியமனம் செய்யப்பட்டுள்ள ேகாயிலில் உடனடியாக பணியில் சேர்ந்து கூடுதல் பொறுப்புள்ள செயல் அலுவலரிடம் இருந்து முழுமையாக ஏற்று அவர்களை பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.

செயல் அலுவலர்கள் கோயிலில் பணியில் சேர்ந்தவுடன் அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் ஊதியம் வழங்க வேண்டும் என்று கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளார்.


Tags : Commissioner ,Hindu Religious Institution , Appointment of Officers of Hindu Religious Affairs Department
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...