×

மகளிர் முத்தரப்பு டி20 இந்தியா அபார வெற்றி

மெல்போர்ன்: மகளிர் முத்தரப்பு டி20 தொடரின் லீக் ஆட்டத்தில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஜங்ஷன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. ஆஸி. மகளிர் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன் குவித்தது. ஆஷ்லி கார்ட்னர் 93 ரன் (57 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் மெக் லான்னிங் 37 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய இந்தியா 19.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து வென்றது.

ஷபாலி வர்மா 49 ரன் (28 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), மந்தனா 55 ரன் (48 பந்து, 7 பவுண்டரி), ஜெமிமா 30, கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 20*, தீப்தி 11* ரன் எடுத்தனர். இங்கிலாந்து, இந்தியா தலா 4 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா 2 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளது. இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே இன்று நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தின் முடிவில், பைனலில் மோதும் 2 அணிகள் முடிவாகும்.

Tags : Womens Tripartite T20 India Wins Big , Womens Tripartite T20, India, Abara Wins
× RELATED சில்லி பாயின்ட்...