×

தாய்லாந்தில் ராணுவ வீரர் வெறிச்செயல் ஷாப்பிங் மால் பகுதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு: சக வீரர் உட்பட 17 பேர் பலி

பாங்காக்: தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள நகோன் ரட்சசிமா என்ற நகரில் பிரபல ஷாப்பிங் மால் உள்ளது. அருகில் உள்ள ராணுவ முகாமில் இருந்து ேநற்று  ஒரு வீரர் திடீரென இயந்திர துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, அந்த மால் அருகே சென்றார். அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக சுட்டார். முதலில் அவர் தனது அருகே இருந்த சக வீரரை சுட்டார். பின்னர், ஒரு பெண்ணையும் சுட்டார். பின்னர் ஆவேசமடைந்த நாலாபுறமும் சுடத் தொடங்கினார். இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். கார்களின் பின்னாலும், மறைவிடங்களை நோக்கியும் ஓடி பதுங்கினர்.

இந்த தாக்குதலில் 17 பேர் பரிதாபமாக பலியாகினர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து அந்த வீரரை பிடிக்க முயன்றனர். ஆனால், தப்பியோடிய அந்த வீரர், தனது பேஸ்புக் பக்கத்தில் துப்பாக்கியை பிடித்தபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரர் பெயர் ஜக்கரபாந்த் தொம்மா என தெரியவந்துள்ளது. அவர் ஏன் இந்த தாக்குதலை நடத்தினார் என தெரியவில்லை. இது பற்றி விசாரித்து வரும் போலீசார், அவரை கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளனர். இந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : soldier ,Thai ,shopping mall , Thailand, soldier, maniac
× RELATED காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்துடன்...