×

கல்லூரி கூடைப்பந்து: செயின்ட் ஜோசப் சாம்பியன்

சென்னை:  பொறியியல் கல்லூரிகளுக்கு இடையிலான சிஐடி கோப்பை கூடைப்பந்து போட்டி, சென்னை தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சென்னை செயின்ட் ஜோசப் கல்லூரி, லீக் சுற்றில் 32-24 என்ற புள்ளி கணக்கில் சவீதா பொறியியல் கல்லூரியையும், கால் இறுதியில் 52-11 என்ற புள்ளி கணக்கில் ராஜலட்சுமி பொறியியல் கல்லூரியையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி சென்றது. அரை இறுதியில், பெரி பொறியியல் கல்லூரியை 50-26 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தியது. இறுதிப் போட்டியில் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியை 66-32 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்திய செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, சிஐடி கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது.

Tags : College Basketball: St. Joseph's Champion , College Basketball, St. Joseph's Champion
× RELATED இந்திய அணியுடன் இளஞ்சிவப்பு பந்தில் டெஸ்ட்...மிட்செல் ஸ்டார்க் ஆர்வம்