×

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 பேர் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிதி : முதல்வர் எடப்பாடி உத்தரவு

சென்னை: மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 பேரின்  குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், டி. நல்லாளம் கிராமத்தை சேர்ந்த ஜெயசெல்வி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தென்காசி மாவட்டம், களப்பாகுளம் கிராமத்தை சேர்ந்த முருகன் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம், சித்தரரேவு கிராமத்தை சேர்ந்த காட்டுராணி அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். தஞ்சாவூர் மாவட்டம், கூத்தூர் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி விவசாய நிலத்தில், மின்மோட்டாரை இயக்க முற்பட்ட போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், தருமநீதி கிராமத்தை சேர்ந்த நடராஜன் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், திருநந்திபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஸ்வரி விவசாய நிலத்தில், மின்மோட்டாரை இயக்க முற்பட்டபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். சேலம் மாவட்டம், காட்டுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த குமார் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, கீழே விழுந்து உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம், தேவாலா கிராமத்தை சேர்ந்த ஹரிஹரன் விளையாடி கொண்டிருந்தபோது, மின் கம்பி பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம், சோலைக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ஜெயா தெருவில் இருந்த மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வி உயர் அழுத்த மின் கம்பி பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், கொடிக்குளம் கிராமத்தை சேர்ந்த அலிஷியாம் மின் கசிவு ஏற்பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், போட்டுக்குழி கிராமத்தை சேர்ந்த வில்லாளி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கோயம்புத்தூர் மாவட்டம், சிக்கதாசம்பாளையம் கிராமத்தை சேர்ந்த கணேசன் விவசாய நிலத்தில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மேட்டுப்பாளையம், காரமடை கிராமத்தை சேர்ந்த விஷ்ணு என்கிற முருகவேல் இரும்பு கம்பிகளை இறக்கி வைக்கும் போது, மின்கம்பியில் பட்டு  மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் மின் கம்பி பட்டு, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், தி. பாஞ்சாலம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.திண்டுக்கல் மாவட்டம், பெரியூர் கிராமத்தை சேர்ந்த வர்ஷா பாம்பு கடித்து உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : families , Family of 17 people,died, electrocution,snake bites has received
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....