×

நாடு, மதம், மொழி எல்லைகளை கடந்த காதல்: ஸ்வீடன் பெண்ணை கரம்பிடித்த தமிழக இன்ஜினியர்

திருச்செங்கோடு: நாடு, மதம், மொழி போன்ற எல்லைகளை கடந்து ஸ்வீடன் நாட்டு பெண்ணை, திருச்செங்கோடு இன்ஜினியர் கரம் பிடித்தார்.  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு -ஈரோடு சாலையில் மர அரவை மில் நடத்தி வருபவர்  சண்முகவேல். இவரது மனைவி  தமிழரசி. இவர்களது  மகன்  தரணி(30). எம்டெக், எம்எஸ்  படித்துள்ளார். இவர் ஸ்வீடன் நாட்டில்   பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். எம்எஸ் படித்தபோது ஸ்வீடன் நாட்டு  தலைநகரான  ஸ்டாக்ஹோமை சேர்ந்த மரினா சூசேன்(28)  என்பவரை  சந்தித்துள்ளார். விடுமுறை தினங்களில் கூடைப்பந்து விளையாடுவதற்கு,  நண்பர்களுடன்  சென்ற இடத்தில்  இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்களும் காதலுக்கு பச்சைக் கொடி காட்டினர். இதையடுத்து, மரினா சூசேன் விருப்பத்தின்பேரில், கிறிஸ்தவ முறைப்படி தேவாலயத்தில் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டார். பின்னர், திருச்செங்கோடு வந்த மணமக்களுக்கு, தரணி  குடும்பத்தினரின் விருப்பப்படி நேற்று இந்து மத முறைப்படி தேவனாங்குறிச்சியில் திருமணம் நடந்தது. இந்த விழாவில் அதிக சடங்குகள்  இன்றி மாலை, தங்கசங்கிலி மற்றும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.  மணமகளின் பெற்றோர், இந்த  திருமணத்தில் பங்கேற்க இயலவில்லை.


Tags : country , The love of country, religion and language borders
× RELATED ஹீரோவுடன் யாஷிகா காதலா?