×

தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் தேரோட்டம் தொடங்கியது

பழனி: தைப்பூசத் திரு விழாவையொட்டிபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் தொடங்கியுள்ளது. பல்லாயிரக்கணக்கான பத்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர். கூடியிருந்த மக்கள் அரோகரா என எழுப்பிய கோஷம் விண்ணை பிளக்க முத்துக்குமாரசாமி தெய்வானையுடன் பவனி வந்தார். தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். தமிழ் கடவுளான முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

Tags : festival ,Palani Murugan Temple ,Thaipoosath Thiruvasti , Thaipoosath Festival, Palani Murugan Temple, Theriottam
× RELATED கொரோனா எதிரொலி; தாயமங்கலம் கோயில்...