×

என்ஐடி கல்லூரியில் இணையவழி வணிகத்திற்காக கைப்பேசி செயலி அறிமுகம்: வாடிக்கையாளர்கள் எளிமையான முறையில் வாங்கி பயன்பெற வழிவகை

திருச்சி: என்ஐடி கல்லூரியில் இயற்கை தயாரிப்பு உணவுகளை இணையவழியில் விற்க கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து என்ஐடி கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர் பிருந்தா, டாக்டர் ஸ்ரீ தேவி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப துறையின் நிதியுதவி திட்டத்தின் கீழ் இணையவழி வணிகத்திற்காக கைப்பேசி செயலியை உருவாக்கியுள்ளோம். சுய உதவிக் குழுக்கள் உருவாக்கிய தயாரிப்புகளை சரியான வாடிக்கையாளர்களுடன் இணைப்பதன் மூலம் அவர்களின் வருவாய் மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்த முடியும் என்பதே திட்டத்தின் முக்கியமாகும். இது சம்பந்தமாக, நாங்கள் மூன்று கைப்பேசி செயலிகளை உருவாக்கியுள்ளோம்.

திருமதிகார்ட்(வாடிக்கையாளர்), திருமதிகார்ட்(விற்பனையாளர் மற்றும் விநியோகம் மற்றும் கையாளுதல்), திருமதி கார்ட் வணிக செயலி வழியாக இயற்கை தயாரிப்புகளான (வீட்டு தயாரிப்புகள்), கீரை வகைகள், உணவு வகைகள், தின்பண்டங்கள், கைவினைப் பொருட்கள், அலங்காரப்பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், மூலிகை தயாரிப்புகள், மளிகைப் பொருட்களை வாடிக்கையாளர்கள் எளிமையான முறையில் வாங்கி பயன்பெற இந்த வணிக செயலி உதவுகிறது. மேலும் சுய உதவி குழுக்கள் மற்றும் சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர் (இல்லத்தரசிகள்) தங்களின் தயாரிப்புகளை எளிமையான மற்றும் சிறந்த முறையில் காட்சிப்படுத்தி வணிகம் செய்ய திருமதிகார்ட் (விற்பனையாளர்) செயலி முக்கிய பங்காற்றும்.

திருமதிகார்ட் (விநியோகம் மற்றும் கையாளுதல்) செயலி வழியாக பொருட்களை விநியோகம் செய்வதற்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்த செயலியை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கொண்டு சேர்ப்பதன் மூலமாக மட்டுமே இத்திட்டத்தை வெற்றிபெற செய்ய முடியும். இது தொடர்பாக, திருச்சி மகளிர் திட்டம் அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட சுய உதவிக் குழுக்களுக்காக 5 நாட்கள் விரிவான நிர்வாக மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை நடத்த உள்ளோம். இந்த மேம்பாட்டு பயிற்சி திட்டம், சுய உதவிக்குழு தயாரிப்புகளை நவீன மயமாக்குவது குறித்த விழிப்புணர்வை அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும் திருமதி கார்ட் மூலம் அவர்களின் தயாரிப்புகளை விற்பனை செய்தல், வருவாய் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு பயிற்சியளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

Tags : Customers ,NIT College: A Simple ,Nit College , Food, College, Science, eCommerce
× RELATED போலி ஆவணங்கள் தயாரித்து 3...