×

கொரோனா வைரஸுக்கு சீனாவில் முதல் வெளிநாட்டவர் பலி: வூஹான் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிப்பு

பெய்ஜிங்: வூஹான் நகரில் கொரானா பாதித்த அமெரிக்க நாட்டவர் ஒருவர் இன்று உயிரிழந்ததாக, பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. சீனாவின் மத்தியப் பகுதியில் உள்ள ஹூபே மாநிலத்தில் உள்ள வூஹான் நகரை மையமாக வைத்து கரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த ஒரு மாதமாக சீனாவை மிரட்டி வரும் இந்த வைரசுக்கு இதுவரை அந்நாட்டில் 722 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 86 பேர் உயிரிழந்துள்ளனர். 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 25க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில் வூஹான் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்கர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் சீனாவில் முதல்முறையாக கரோனோ வைரசுக்கு வெளிநாட்டவர் ஒருவர் பலியாகியுள்ளார். இதுகுறித்து பேசிய வூஹானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர், வூஹான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பிப்ரவரி 6ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம், என கூறியுள்ளார்.


Tags : China ,foreigner ,Wuhan ,An American Dies , Corena virus, china, american, Dies , wuhan
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா