×

இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி: 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி

நியூசிலாந்து: இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கப்தில் 79 ரன்கள், ராஸ் டெய்லர் 73 ரன்களையும் குவித்தனர். தொடர்ந்து, 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி,48.3 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.  


Tags : ODI ,India ,New Zealand , 2nd ODI against India: New Zealand won by 22 runs
× RELATED ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி