இலங்கையில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஷே பேட்டி

டெல்லி: இலங்கையில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாக ராஜபக்ஷே தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, இலங்கை பிரதமர் ராஜபக்ஷே டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய ராஜபக்ஷே முக்கிய பிரச்சனைகள் குறித்து மோடியுடன் விவாதித்ததாக தெரிவித்தார். பாதுகாப்பு, பொருளாதாரம் விசயங்களில் இருநாடுகளும் ஒத்துழைக்கும் என தெரிவித்தார். மேலும் இலங்கையில் வீட்டு வசதி திட்டங்களுக்கு இந்தியா மேலும் உதவ ராஜபக்ஷே கோரிக்கை விடுத்தார்.

Related Stories:

>