×

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி: பழநியில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு

பழநி: பழநியில் மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானதை தொடர்ந்து அவர் வசித்து வந்த பகுதியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி, ராஜாஜி ரோட்டை சேர்ந்தவர் ராஜபாண்டி. எலக்ட்ரீசியன். இவரது மகள் மமதிகா (6). கடந்த 1 வார காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மமதிகா, பழநி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மமதிகா உயிரிழந்தார்.

இதையடுத்து நேற்று மமதிகா வசித்து வரும் குடியிருப்பு பகுதியில் நலப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் ஜெயந்தி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கழிவுநீர் கால்வாய் ஓரம் வரும் குடிநீர் குழாய்களை மாற்று வழியில் கொண்டு செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் கொசு மருந்துகள் அடிப்பது தொடர்பாகவும், கொசுக்கள் உற்பத்தியாகும் டயர் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்துவது குறித்தும் நகராட்சி, சுகாதார அதிகாரிகளிடம் எடுத்துரைக்கப்பட்டது. மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியான சம்பவம் பழநி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Palani ,Mystery fever ,Dindigul district , Palani, girl, sacrifice, treatment, hospital
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது