×

தகவல் தெரிவிக்காமல் வெளியூர் போறீங்களா? ‘வீட்ல திருட்டு நடந்தா நாங்கள் பொறுப்பல்ல...’: போலீசார் எச்சரிக்கை போஸ்டர்! திருவில்லி. பகுதி மக்கள் ‘திகில்’

திருவில்லிபுத்தூர்:  திருவில்லிபுத்தூர் பகுதியில் தகவல் தெரிவிக்காமல் வெளியூர் செல்லும் பொதுமக்களின் வீடுகளில் திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடந்தால், நாங்கள் பொறுப்பல்ல என போலீசார் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே, நத்தம்பட்டி காவல் நிலைய கட்டுப்பாட்டில் அழகாபுரி, மூவரைவென்றான், சீலநாயக்ககன்பட்டி, காடனேரி, அக்கனாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம பகுதிகளில் அடிக்கடி கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதையடுத்து நத்தம்பட்டி போலீசார் பொது இடங்களில் ‘காவல்துறை அறிவிப்பு’ என்ற பெயரில் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

அதில், ‘பொதுமக்கள் சொந்த வேலையாக வெளியூர் செல்லும்போது, வீடு பூட்டப்பட்டு அந்த சாவி யாரிடம் உள்ளது’ என்பதையும், ‘வீட்டிற்கு எத்தனை வாசல் உள்ளது என்பதையும் நத்தம்பட்டி காவல்நிலையத்தில் எழுத்துபூர்வமாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கா விட்டால், அவர்கள் வீட்டில் நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு காவல்நிலையம் பொறுப்பல்ல’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்களை பார்க்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.  தகவல் கூறலாம். அதற்காக கொள்ளை நடந்தால் நாங்கள் பொறுப்பல்ல என்று போலீசே எப்படி போஸ்டர் ஒட்டலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags : Tiruvilli ,Area ,theft ,people horror phone , Srivilliputhur, Nattambatti, House, Poster, Virudhunagar
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு