×

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம் : 70 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடக்கிறது

புதுடெல்லி:  டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

*டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் பதவிக்காலம் வரும் 22ம் தேதியுடன் முடிகிறது.

*இதனால், புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, இம்மாநிலத்தில் உள்ள 70 சட்டப்பேரவை தொகுதிகளிலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.

*காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடக்கிறது. பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசார்,  துணை ராணுவப் படையினர் என 40 ஆயிரம் பேர்  குவிக்கப்பட்டு உள்ளனர்.  

*இத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜ, காங்கிரஸ் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

*இவர்களில் பெண் வேட்பாளர்கள் 79 பேர். ஆண் வேட்பாளர்கள் 593 பேர். 2 கோடியே 1 லட்சத்து 43 ஆயிரத்து 686 வாக்காளர்கள் வாக்களிக்க உ?ள்ளனர். 13,750 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

*ஆளும் ஆம் ஆத்மி. 70 தொகுதியிலும் தனித்து களம் காண்கிறது. பாஜ 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள்   4 இடங்களிலும், காங்கிரசும் 66 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

*காங்கிரஸ் கூட்டணி கட்சியான லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் 4 இடங்களில் நிற்கிறது. இன்று பதிவாகும் வாக்குகள் 11ம் தேதி எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படுகிறது.

Tags : Voting ,assembly polls ,Delhi ,constituencies , Delhi, Assembly, by-election, AAP, polling, Bharatiya Janata Party
× RELATED ஈரானில் சிக்கித் தவித்த 277 இந்தியர்கள் டெல்லி வருகை