×

2016 விஏஓ தேர்விலும் முறைகேடு: சிபிசிஐடி விசாரணையில் அம்பலம்

சென்னை: டிஎன்பி எஸ்சி 2016 விஏஓ தேர்விலும் முறைகேடு சிபிசிஐடி விசாரணையில் அம்பலாகியுள்ளது.கடந்த 2017 குரூப் 2ஏ தேர்வில், ராமேஸ்வரம் மையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக, குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதுவரை குரூப் 2ஏ தேர்வில் நடந்த முறைகேட்டில் 16 நபர்களும் குரூப் 4 தேர்வில் 16 பேர் என மொத்தம் 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று வடமருதூர் மேட்டுக்காலனி கிராமத்தை சேர்ந்த, ஆரியூர் கிராம நிர்வாக அலுவலர் நாராயணன் (எ) சக்தி (36) என்பவர் காவலர் பூபதி மூலம் 2016 கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் தனக்கு ரூ.3,50,000ம், தனக்கு தெரிந்த 5 நபருக்கு மொத்தம் ரூ.34 லட்சத்தையும் முக்கிய குற்றவாளியான ஜெயகுமாரிடம் கொடுத்து முறைகேடாக தேர்ச்சி பெற வைத்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து புதிய வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2017 குரூப் 2ஏ தேர்வில் நாராயணன் (எ) சக்தி காவலர் பூபதியுடன் கூட்டாக சேர்ந்து அவரது மனைவி மகாலட்சுமியையும் சேர்த்து 7 தேர்வர்களிடமிருந்து மொத்தம் ரூ.73 லட்சத்தை முக்கிய குற்றவாளியான ஜெயகுமாரிடம் ெகாடுத்து முறைகேடு செய்துள்ளார். இதில் நாராயணன் (மனைவி மகாலட்சுமி மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பில் நிராகரிக்கப்பட்டு மற்ற 6 தேர்வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த இரு வழக்குகளிலும் நாராயணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : 2016 VAO, Examination, CBCID, Exposed
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...