×

2024ம் ஆண்டுக்குள் ராணுவ தளவாட ஏற்றுமதி 35 ஆயிரம் கோடி இலக்கு

லக்னோ:  உத்தரப் பிரதேசம் மாநிலம், லக்னோவில் கடந்த 5ம் தேதி தொடங்கிய, ராணுவ கண்காட்சி இன்று முடிகிறது. இதில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. அதேபோல், பல்வேறு நாடுகளும் தங்களின் ஆயுதங்களை, தளவாடங்களை காட்சிக்கு வைத்துள்ளன.இங்கு நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில், ‘‘கடந்தாண்டு நடந்த ராணுவ கண்காட்சியில் 10 ஆயிரத்து 745 கோடிக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.  இது, 206-17ம் ஆண்டு ஏற்றுமதியை விட 7 மடங்கு அதிகம். இந்த கண்காட்சியில் இதுவரை 200 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இது, நாட்டின் வரலாற்று சாதனை. தளவாட தயாரிப்பில் இந்தியாவின் திறனை இது வெளிப்படுத்துகிறது.

2024ம் ஆண்டுக்குள் ராணுவ தளவாட ஏற்றுமதி இலக்கை நம்மால் 35 ஆயிரம் கோடியாக உயர்த்த முடியும்,’’ என்றார். பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய் குமார் பேசுகையில், ‘‘இந்த கண்காட்சியில் 100 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், இதுவரை 200 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது,’’ என்றார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘‘இந்த காண்காட்சி மூலமாக உ.பி 23 ஒப்பந்தங்களை செய்துள்ளது. இதன் மூலம், 50 ஆயிரம் கோடி முதலீடு கிடைக்கும். இது, இரண்டரை லட்சம் முதல் 3 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்,’’ என்றார்.


Tags : military logistics target
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...