×

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை கழற்றி விட்டது சவுதி

இஸ்லாமாபாத்: காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இவ்விவகாரத்தை எப்படியும் சர்வதேச பிரச்னையாக்கி இந்தியாவுக்கு நெருக்கடி தர தீவிரமாக முயற்சித்தது. ஐநா பொதுக்கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் பற்றி பேசியும் பாகிஸ்தானால் எதுவும் செய்ய  முடியவில்லை.  இதனால், இஸ்லாமிய நாடுகளையாவது ஒன்றுதிரட்டி பிரச்னையை ஊதிப் பெரிதாக்க முயற்சித்தது.
இதற்காக, 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தை உடனடியாக கூட்டி, காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தியது. இந்த அமைப்பில் எது நடக்க வேண்டுமென்றாலும் அதற்கு சவுதி அரேபியாவின் ஆதரவு வேண்டும்.

இந்த நிலையில், வெளியுறவு அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தை கூட்டுவது தொடர்பான உயர்மட்ட கூட்டம் ஜெட்டாவில் நாளை நடக்க உள்ளது. இதில், காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க வேண்டுமென்ற பாகிஸ்தானின் கோரிக்கையை சவுதி நிராகரித்து விட்டதாக இம்ரான் தெரிவித்ததாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  இது பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Tags : Pakistan ,Kashmir ,Saudi , Kashmir, Pakistan, Saudi
× RELATED இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவு: பாகிஸ்தான் பரிசீலனை