×

துப்பாக்கி முனையில் லேப்டாப் பறிப்பு

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம், மதுரைவீரன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன் (40). அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் வாகனங்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு, நேற்று இரவு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மகேஷ் (22), உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ராம் (23) ஆகிய இருவரும் பணியில் இருந்தனர்.  இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் பைக்கில் வந்த 3 பேர், கம்பெனிக்குள் புகுந்து துப்பாக்கியை காட்டி மிரட்டி, ஊழியர்களிடம் இருந்த லேப்டாப்பை எடுத்து கொண்டு பைக்கில் தப்பி சென்றனர்.  இதுகுறித்து ஊழியர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: புளியந்தோப்பு  டிக்காஸ்டர் ரோடு பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராஜசேகர் (29). இவர், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள ஆடு தொட்டி அருகே நடந்து சென்றபோது, 3 பேர் இவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி, ஒரு சவரன்  செயின் மற்றும் அவரிடம் இருந்த விலை மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர். புகாரின் பேரில் புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில், புளியந்தோப்பு காந்தி நகரை சேர்ந்த தசரதன் (31) உள்பட மூவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. இதில், தசரதனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.

„ அண்ணாநகரை சேர்ந்த மாரியப்பன் (24), கடந்த 5ம் தேதி இரவு முகப்பேர் வழியாக நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்தவர், இவரை மறித்து, கத்தியை காட்டி மிரட்டி 10,500 மற்றும் விலை மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றுள்ளார்.  புகாரின் பேரில், திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், பாடி சக்தி நகரை சேர்ந்த மோகன் (22) என்பவர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்தனர்.


Tags : Flush the laptop ,gunpoint
× RELATED திமுக நிர்வாகி மீது பாமகவினர் தாக்குதல் போலீசார் தடியடி